பாலை நிலவன்
பாம்பு அறை
மனிதர்களின் வாசமற்ற பூமி அல்ல
இதுபேரச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள
நவீன மனக் குறிகள் விதைக்கப்பட்டுள்ளன.
எழுந்து பயணமாகும் யுவன் யுவதிகள்
பூனையாக இரவில் கூடடைகிறார்கள்
அந்நாளின் தோலின் மீதுதான்
நோய்கள் விதைக்கப்பட்டன.
தினந்தோறும் பூமியின்
ஒளிமுக வாசலில் கையேந்தி நிற்கும் ஒருவனிடம்
ஒரு விதைகூடப் பரிசளிக்க இயலாத அதே அண்டத்தின் மீதுஅவன் நோயுடனே வாழ்ந்துவருகிறான்
வீடுகளுக்குள் பாம்பெனப் பதுங்கிவிட அறைகளில் பூனைகள் மட்டுமேசுற்றிச் சுற்றி வருகின்றனவே அது எவ்விதம்
அதுகூட அறியாமலேயே நோயின் தாய்மையின்
கரங்களில் மயங்கி வீழ்ந்திருக்கிறான்.
சிதைவு சிதைவு என நகரும்
பூமி மீது
சிறுமலரெனத்தன் குழந்தையையும் கிடத்தியிருக்கிறான்.
அவனோநோயின் தாய்மையை
அறியாமலேயே கண்மூடியிருக்கிறான்.
பஞ்சு இறக்கைகளின் வானம்
கிளர்ச்சியூட்டும் ஒரு கனவுக்காகமலைப் பிரதேசம் வந்தவன்பரவசத்தை மனத்தின் சிதிலத்திலிருந்துமீட்டுகிறான்.
அதனூடாகக் காலவெளியின்அழுகையைத் திசையெங்கும் பூசுகிறான்
அவன் முத்தத்தின் இனிப்பால்மலையின்
பெருங்கற்கள் அசைகின்றன.
பேரன்பின் வியர்வை மணமும்மலையிலிருந்து மஞ்சு விரிப்பாக
மோதி நாசியில் ஏறுகிறது
பஞ்சு இறக்கைகளின் வானம்தலை வழியமலைப் பிரதேசம் நடனத்தின்அசைவுகளுக்குள் வந்துவிட்டது.
கீழே ஊர்ந்து நகரும் எறும்பு மனிதர்கள்
எதையுமே அறியாதவர்களாக பெரும்பாரத்தை சுவாசத்தின் கனல் பொங்கசுமந்து நகர்கிறார்கள்.
தேகமணம் இனிக்கமார்பில் நீந்தும் மலைப் பிரதேசம் கிளர்ச்சியூட்டும் கனவாகமெல்ல விரிவுகொண்டுவிட்டது
மலைப் பிரதேசம் வந்தவனின்காலடி நிலம்பித்தத்தின்
ஒரு கணமாக எழுந்து நிற்கிறது.
ஆடத் தொடங்குகிறான் பைத்யன் குலுங்குகிறது மலை.